18/10/2021 16:31:27 PM மா கதிர்வேல் 332
கோவை 18-10-21
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை.
கடந்த அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து அவரது இல்லம், அலுவலகம் அவரது உறவினர்கள் இல்லங்கள் ஆகிய இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை ,புதுக்கோட்டை, காஞ்சிபுரம், என 43 இடங்களில் இச்சோதனையானது நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலை SNV கார்டன் பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவின் தந்தைக்கு சொந்தமான வீட்டிலும் காலை 6 மணி முதல் பெண் அதிகாரி உட்பட 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோவை வரும்போது இந்த வீட்டில் தங்குவது வழக்கம் என கூறப்படும் நிலையில் அதன்டிப்படையில் சோதனையானது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Please register at https://kyc.eurekasecurities.net/home/index/729 for opening Trading and Demat Account.