28/12/2021 17:04:58 PM மா கதிர்வேல் 270
எண்ணத்தில் எழுச்சியையும் இதயத்தில் மலர்ச்சியையும் உண்டாக்கும் நமது பாரம்பரிய நாட்டார் கலைகளை மீட்டுருவாக்குவதையும் அதனை மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்ப்பதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு செயலாற்றிக் கொண்டிருக்கிறது தமிழி இசைக்களம்.
அந்த வகையில் 26-12-2021 ஞாயிறு (மார்கழி - 11) அன்று சேலம் செந்தில் பப்ளிக் ஸ்கூல் கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தமிழி இசைக்களத்தின் சார்பில் நமது பாரம்பரிய கலைகள் அரங்கேற்றப்பெற்று சிறப்பானதொரு நிகழ்வாக அமைந்தது.
கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்
நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நின்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப் பறிக் கொடுத்தேன்.
என்னும் பாரதியின் வரிகளுக்கொப்ப நிகழ்விற்கு வந்திருந்த மக்களுக்கு பறையிசை ஆட்டம், பறையும் பரதமும், பறையும் சிலம்பமும், பறையும் பாட்டும், பெருஞ்சலங்கை ஆட்டம் என பல்சுவை கலை விருந்து படைத்து மகிழ்வித்ததில் தமிழி இசைக்களம் மகிழ்ச்சி கொள்கிறது.
Please register at https://kyc.eurekasecurities.net/home/index/729 for opening Trading and Demat Account.